
posted 4th September 2022
கிழக்கு பகுதியில் ஐக்கிய களப் பயணத்தை முன்னிட்டு நான்கு மதங்களைச் சார்ந்தவர்கள் மதத் தலைவர்கள் மற்றும் பொது நிலையினர் கடந்த வெள்ளிக்கிழமை (26.08.2022) காத்தான்குடி , சொறிக்கல்முனை , வீரமுனை . அம்பாறை மற்றும் புத்தங்கள ஆகிய இடங்களுக்குச் சென்று அவ் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல் , கிறிஸ்துவ மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் . இந்து ஆலயங்கள் மற்றும் புத்த விகாரைகள் ஆகியவற்றுக்குச் சென்று தரிசனத்தை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மன்னாரிலிருந்து தற்பொழுது மட்டக்களப்பு பகுதிக்குச் சென்று கடமைபுரிந்து வரும் மெதடிஸ்த திருச்சபையின் போதகரும் நீண்ட காலமாக சமாதானத்துக்காக அர்ப்ணித்து செயல்படுபவருமான அருட்பணி கே. ஜெகதாஸ் அடிகளார் இவர்களின் களப்பயணம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;
தங்களின் களப்பயணமானது ஒவ்வொரு சமயங்களினதும் பண்பாடுகள் அவர்களின் விழுமியங்களை கேட்டு அறிந்து கொள்ளும் நோக்குடனும் அத்துடன் அனைவரும் ஒன்றினைந்து மாவட்டத்திலும் நாட்டிலும் சமாதானத்துக்கான செயல்பாடுகளையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் நோக்குடனே இவைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்
இந்த குழுவில் 46 நபேர் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)