
posted 15th September 2022
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று புதன்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் பதாதைகள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)