
posted 13th September 2022
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார், ஜுன், ஜுலை மாதத்திற்கான போஷாக்குணவுப் பொருட்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இதன்படி, நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20000 ரூபா பெறுமதியான போஷாக்குணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உறுதிச் சீட்டுக்களின் படியான ஜுன், ஜுலை மாதங்களுக்கான போஷாக்கு உணவுப் பொருட்களை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணித் தாய்மார் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முதல் பிரதேச செயலகத்தினால் அங்கீகரிக்கப்பபட்ட வியாபார நிலையங்களுக்குச் சென்று போஷாக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20000 ரூபா போஷாக்கு உணவுக்கான கொடுப்பனவு இம்மாதத்தில் வழங்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)