
posted 28th September 2022
வடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் துன்னாலை முள்ளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் காஞ்சன விமலவீர தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் சான்றுப் பொருட்களும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)