
posted 20th September 2022
சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துவதுடன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் தமிழர் பிரச்சனையில் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது. அத்துடன் மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திங்கள் கிழமை (19.09.2022) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னாரில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு தமிழ் இனத்தை இனப் படுகொலையாக அழித்த சம்பவங்களை தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்இ முன்வைத்து வருகின்றனர்.
இதன் மூலம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் எம்மை பகடக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.
சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்துள்ளபோதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் எமது விடயத்தில் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.
தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும் தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது பிரேரணை எந்தவித பயனும் இல்லாத ஒன்றாகவே காணப்படும்.
ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும் ஐ.நா. பரிந்துரைகளுக்கும் தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது கண்கூடு.
தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி தாங்கள் அதற்கு உடன்பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும் மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY