
posted 11th September 2022
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவினரால் தற்கொலை தடுப்பு தின நிகழ்வு சனிக்கிழமை (10) இடம்பெற்றது.
காலை 9.00கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் S. சுகந்தன் தலைமைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் எஸ். சிவதாஸ், சுவீஸ்லாந்து நாட்டின் உளநல மருத்துவர் கேமா நவரஞ்சன், மாவட்ட உளநல மருத்துவர் M. ஜெயராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவில் கொவிட் காலங்களில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,உளநல சிகிச்சை பெறுவோர் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)