
posted 25th September 2022
கதிர். திருச்செல்வம் எழுதிய "உயிரோடு நானாக" நூல் அறிமுக விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எந்திரி நடராசா சிவலிங்கமும், சிறப்பு உரையாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் பசீர் சேகுதாவூத்தும் கலந்து கொண்டனர்.
இந்நூலுக்கான அறிமுக உரையினை மகுடம் பதிப்பக நிறுவுனர் வி. மைக்கல் கொலினும், நூல் மதிப்பீட்டு உரையினை கலை, இலக்கியச் செயற்பாட்டாளரும், நூல் விமர்சகருமான திருஞானசம்பந்தன் லலிதகோபனும் நிகழ்த்தினர்.
இங்கு வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியினை திருகோணமலை நீர் வடிகாலமைப்புச் சபை பிரதம பொறியியலாளர் எந்திரி அமலதாஸ் வசந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY