
posted 10th September 2022
எலிசபெத் மகாராணியின் மறைவால் முழு உலகமும் ஆறாத்துயரில் ஆழந்துள்ள நிலையில், இலங்கை மக்களுக்கும் துயரில் பங்கு கொண்டிருப்பதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராணியின் மறைவையடுத்து நாடெங்கும் அரச அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் 19 ஆம் திகதி மகாராணியாரது மரணச் சடங்கு இடம்பெறலாமென எதிர்பார்ககப்படும் நிலையில் அன்றைய தினத்தையே இலங்கையில் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்த செய்தியறிந்து தான் மிகுந்த கவலையடைந்திருப்பதாக தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)