இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு நினைவாக மரம் நாட்டு வைபவம்

இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடிகாமம் பொலிஸாரால் கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்துடன் இணைந்து நேற்றைய தினம் வியாழன் (08) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வீதி ஓரமாக மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடிகாமம் பொலிஸ் நிலைய போலீசாரும் கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் என பலரும் கலந்து கொண்டு வீதியோரத்தில் மரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு நினைவாக மரம் நாட்டு வைபவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)