
posted 13th September 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கை ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் தமது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப குறிப்பு புத்தகத்தில் நேரடியாகச் சென்று தலைவர்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதன்படி முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், உயர்ஸ்தானிகராலயத்திற்கு நேற்று (12) சென்று, மகாராணியின் மறைவையொட்டிய தமது இரங்கலைப் பதிவு செய்தார்.
இதன்போது பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton OBE) அவர்களும் உடனிருந்ததுடன், அவரிடம் தலைவர் ஹக்கீம் நேரிலும் அனுதாபங்களை வெளிப்படுத்தினார்.
இதேவேளை அமெரிக்க யூ.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தாபருவக்கும், இலங்கை எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒனறும் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தற்போதய நாட்டின் சூழ்நிலைக்கேற்ற பயனுள்ள கருத்துக்கள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)