
posted 6th September 2022
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரய்னா ஏற்கனவே சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்பொழுது இந்தியன் ப்றீமியர் லீக் தொடர் உட்பட அனைத்து உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
226 ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரத்து 615 ஓட்டங்களையும், 78 இருபதுக்கு 20 போட்டிகளில் ஆயிரத்து 605 ஓட்டங்களையும், 18 டெஸ்ட் போட்டிகளில் 768 ஓட்டங்களையும் பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா 2020 ஆண்டு சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இருந்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய சுரேஸ் ரய்னா தற்போது அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)