அதிகரிக்கும் கொரொனாத் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில்மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் 3, 4ஆவது தடுப்பூசிகளை பெற வேண்டும். இல்லாவிடின் இறப்புகள் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொதுமக்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்றுதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசன், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், சமுதாய வைத்திய நிபுணர் சு. சிவகணேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதிகரிக்கும் கொரொனாத் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY