அட்டாளைச்சேனையில் நினைவேந்தல்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 22 ஆவது நினைவு தினத்தையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு ஒன்று அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டிலும், மத்திய குழுத்தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் தமைமையிலும் நிகழ்வு நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கெண்டார்.

நிகழ்வில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி தாம் செய்யப்பட்டதுடன் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

“நாடு விட்டு நாடு தாவி தஞ்சம் கோரிய முன்னாள் ஜனாதிபதி கோட்டா பயராஜபக்ஷ இறுதியில் நாட்டுக்கே திரும்பி வந்துள்ளார். தஞ்சம் கொடுக்க இத்தகைய பேர்வழிகளுக்கு எந்த நாடும் முன்வராமை எடுத்துக்காட்டானதாகும்.”
என நிகழ்வில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் கூறினார்.

அட்டாளைச்சேனையில் நினைவேந்தல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY