
posted 16th September 2022
434 கிலோகிராம் கேரளக் கஞ்சாவுடன் இந்தியர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட கடல் ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புத்தளம் குதிரைமலை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுப்பட்ட இந்தியர்களின் படகுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே இவ்வாறு கேரளக் கஞ்சா காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி 130 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் புத்தளம் - கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)