
posted 5th September 2022
அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சை முடிவின்படி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மன்னார் மாவட்டமே விகிதாசாரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் பல்கழைக்கழக அனுமதியில் விகிதாசாரத்துக்கு அமைவாக இடங்களைப் பிடித்துள்ள மாவட்டங்களின் நிலைகள் பின்வருமாறு;
- 1ம் இடம் மன்னார் 68.86 வீதம்
- 2ம் இடம் திருகோணமலை 68.50 வீதம்
- 3ம் இடம் மட்டக்களப்பு 67.41 வீதம
- 4ம் இடம் புத்தளம் 67.28 வீதம்
- 5ம் இடம் பதுளை 67.02 வீதம்
- 6ம் இடம் நுவரெலியா 66.17 வீதம்
- 7ம் இடம் யாழ்ப்பாணம் 66.02 வீதம்
- 8ம் இடம் முல்லைத்தீவு 65.47 வீதம்
- 9ம் இடம் கொழும்பு 64.92 வீதம்
- 10ம் இடம் மாத்தளை 64.82 வீதம்
- 11ம் இடம் கேகாலை 64.18 வீதம்
- 12ம் இடம் மாத்தற 64.07 வீதம்
- 13ம் இடம் அம்பாறை 63.71 வீதம்
- 14ம் இடம் மொனராகலை 63.63 வீதம்
- 15ம் இடம் வவுனியா 63.53 வீதம்
- 16ம் இடம் குருநாகலை 62.98 வீதம்
- 17ம் இடம் கண்டி 62.63 வீதம்
- 18ம் இடம் களுத்துறை 62.61 வீதம்
- 19ம் இடம் காலி 62.36 வீதம்
- 20ம் இடம் கம்பஹா 61.74 வீதம்
- 21ம் இடம் இரத்தினபுரி 61.73 வீதம்
- 22ம் இடம் பொலநறுவ 60.92 வீதம்
- 23ம் இடம் கிளிநொச்சி 60.23 வீதம்
- 24ம் இடம் அனுராதபுரம் 59.76 வீதம்
- 25ம் இடம் ஹம்பாந்தோட்டை 58.99 வீதம், ஆகும்
இம்முறை 149,946 பேர் பல்கலைக்கழகம் நுழைய தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)