
posted 14th September 2022
வடக்கு - கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 ஆவது நாள் போராட்டம் நேற்று செவ்வாய் (13) கிளிநொச்சியில் இடம் பெற்றது.
வடக்கு - கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமாகி 44 ஆவது நாளான நேற்று (13) கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைதி போராட்டம் இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)