
posted 8th September 2022
156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையம், சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலையுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த வைத்திய சேவை முகாம் வைத்தியசாலை மண்டபத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி எஸ்.எம். றிசாத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் உரையாற்றுகையில், இலங்கையில் பலம்பெறுமை மிக்க பொலிஸ் சேவையின் 156 ஆவது வருடாந்த கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் உரையாற்றியதுடன் பொலிஸ் பொது மக்கள் நல்லுறவின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)