விழிப்புக்குழு ஆரம்பித்து 100 நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு

விழிப்புக்குழு ஆரம்பித்து 100 நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு 26.09.2022 அன்று இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளம் பகுதியில் பொது மக்களால் விழிப்புக்குழு ஆரம்பிக்கப்பட்டு, 100 நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்ற திருட்டு சம்பவம் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிசாரின் ஒத்துழைப்புடன் குறித்த பணி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் 100வது நாளன்று, கேக் வெட்டி மகிழ்ச்சி கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் மக்களின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விழிப்புக் குழக்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் நிம்மதியுடன் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளதாகவும் கிராம மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
விழிப்புக் குழு பணியில் ஈடுபடும் குழுக்களுக்கான விசேட அடையாள அட்டையும் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், கனகாம்பிகை குளம் பிரதேச மக்களைப் போன்று, தாமாகவே தத்தமது பிரதேசங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், குற்றச் செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

விழிப்புக்குழு ஆரம்பித்து 100 நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY