வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் புதன் (21) நடைபெற்றது.

வல்வெட்டித்துறை எம். ஜி. ஆர். சதுக்கத்தில் ஆதிகோயிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலிபனின் 35ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமை தாங்கி நடத்தியதுடன் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எம். ஜி. ஆர். சதுக்கத்தில் 26 ஆம் திகதி வரை உணர்வு பூர்வமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)