
posted 2nd September 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை சனிக்கிழமை (03) நாடு திரும்புகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை துறந்தார். சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருந்த அவர், பின்னர் தாய்லாந்துக்கு சென்றார். தற்போது அங்கே தங்கியுள்ள நிலையிலேயே நாளை நாடு திரும்புவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)