
posted 6th September 2022
எதிர்வரும் நாட்களில் கொழும்புச் சந்தையில் மீனின் விலைகள் குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டிருக்கும் இதேவேளையில் மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் மீனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நான்கு நாட்களில் கொழும்பு பேலியகொடை மெனிங் சந்தையில் மீன் விலை 50 சத வீதத்தால் குறைவடையக்கூடும் என இவ் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
ஆனால் மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மீனவர்களுக்கான எரிபொருள் தட்டுப்பாட்டாலும் அத்துடன் எரிபொருளின் விலையேற்றத்தாலும் பெரும்பாலான மீனவர்கள் தங்கள் மீன்பிடியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வருவதால் இப் பகுதியில் மீனின் விலையேற்றம் அதிகமாக காணப்படுவதுடன் மீன்கள் கிடைப்பதும் அரிதாகவே இருக்கின்றது என கவலை தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)