
posted 9th September 2022
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணி எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 10 நாட்களுக்குப் பின் நடைபெறுமெனவும், ஐந்து நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணியின் பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு இலங்கை மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய துயரை வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
நாட்டின் பிரதேச செயலகங்கள் தோறும் இவ்வாறு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் இன்று முதல் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)