
posted 16th September 2022
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருவருடன் சந்திப்பொன்றை நடாத்தி மந்திராலோசனை செய்துள்ளார்.
அதாவது இலங்கை முஸ்லிம்களின் முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாட்டில் முஸ்லிம்களின் நிலமை தொடர்பாகவும், நாட்டின் தற்போதய அரசியல் பொருளாதார நிலமைகள், மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பாகவும் இரு தலைவர்களுடனும் தூதுவர் கலந்துரையாடி பல தகவல்களையும் கருத்துக்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கியமான கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருவரை ஒருங்கே சந்தித்தமை முக்கியத்துவமாக பேசிக் கொள்ளப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)