பொதுக்கட்டமைப்பு

யாழ் மாநகர சபைக்குத் தியாக தீபத்திற்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் தார்மீக ரீதியான தகுதியோ அருகதையோ கிஞ்சித்தும் உண்டா?

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.

பொதுக் கட்டமைப்பு என்பது அரசியல் சாராத பொதுவான - நடுநிலையான தரப்புக்களால் உருவாக்கப்படுவது. அரசியல் சார்ந்த, அதுவும் தியாக தீபத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர்த்திரான, முரணான கொள்கைகளைக் கொண்டவர்களால் அமைந்துள்ள யாழ் மாநகர சபைக்குத் தியாக தீபத்திற்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் தார்மீக ரீதியான தகுதியோ அருகதையோ கிஞ்சித்தும் உண்டா?

தியாக தீபத்தை நினைவேந்துவதற்கான உண்மையான பற்றினால் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தால், அதற்கான ஏற்பாடுகள் நினைவேந்தல் நாட்கள் ஆரம்பமாக முன்னரே செய்யப்பட்டிருக்குமா? அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் குழுவினால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டு நினைவேந்தல் நடைபெற்றுவரும் நிலையில் இடையில் குழப்பும் வகையில் செய்யப்படுமா?

2017 முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நினைவேந்தலைக் கிரமமாகச் செய்துவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குழப்பவாதிகளா? அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவேந்தலுக்குள் இடையில் வந்து புகுந்த யாழ் மாநகர சபையின் அரச ஆதரவுக் குழுக்கள் குழப்பவாதிகளா?

மக்களே தீர்மானிக்கட்டும்!

பொதுக்கட்டமைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY