
posted 11th September 2022
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய செயலாளராக அருணகிரி வினோராஜ் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். கரவெட்டி பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்ற அவர், பருத்தித்துறை பிரதேச சபையின் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவரை தவிசாளர் அ.சா. அரியகுமார், உப தவிசாளர் கு. தினேஷ், சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)