
posted 5th September 2022
கல்முனை சிங்கள மகா வித்தியாலய குறைநிறைகளை ஆராயும் கள விஜயம் ஒன்று கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் அழைப்பின் பேரில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து வகுப்பறைகள் கட்டிடங்கள் சேதமாகியுள்ள விடயங்களை கண்டறிந்து கொண்டதுடன், பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியதுடன் இது தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் கல்முனை சிங்கள மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)