
posted 26th September 2022
சத்துணவு வழங்கலை நிறுத்த வேண்டாம் எனக் கோரி விசுவமடுவில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று ஞாயிறு (25) நடைபெற்றது.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் தென்னிந்திய திருச்சபையால் சத்துணவு மற்றும் மாலை நேர கல்வி உள்ளிட்ட சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பணிக்கான புதிய ஊழியராக வண. பிதா ஜோன் தேவசகாயம் கடந்த 18ஆம் திகதி தென்னிந்திய திருச்சபை பேராயத்தால் நியமிக்கப்பட்டார். எனினும், ஏற்கனவே பணியில் இருந்த வண. எஸ்தர் மடுராணி பொன்ராசா, குறித்த பணித்தளத்தில் இருந்து வெளியேற மறுத்துள்ளதாகவும், அதானால் குறித்த திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளதாகவும் திருச்சபை கவலை தெரிவித்துள்ளது.
பணியில் இருந்த வண. எஸ்தர் மடுராணி பொன்ராசாவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட பணியின்போது, பெருந்தொகை பணம் காசோலை ஊடாக மாற்றப்பட்டு, சிறு சிறு செலவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து செலவுகளுக்கும் காசோலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை.
மேலும் குறித்த ஊழியத்துக்கான சேவைக்காலம் நிறைவடைந்து இடமாற்றம் அறிவிக்கப்பட்ட நிலையில், இடமாற்றத்தை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்புக்களை ஏற்ற ஊழியரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கணக்காய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து மிக விரைவில் இந்தப் பணி முன்னெடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட குரு முதல்வர் வணபிதா கோணேஸ்வரன் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY