
posted 8th September 2022
உலக சேவைகள் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதி நேற்று (07) துப்புரவு செய்யப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தின் 156ஆவதுஆண்டு நிறைவை முன்னிட்டு பொலிஸ் வாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உலக சேவைகள் தினத்தை முன்னிட்டு நேற்று லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் யாழ். மாநகர சபையுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பணியில் யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை பிரதிமுதல்வர் மற்றும் யாழ். மாநகர சபை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)