
posted 19th September 2022
இன்றைய நாளில் அவ் வாழ் மக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் தோட்டங்களில் கடந்த யூன் மாதத்திலிருந்து இற்றை வரை உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தங்கள் மதத் தளங்களுக்கு கொண்டு சென்று இறைவனின் சந்நிதானத்தில் வைக்கப்பட்டு நல்ல விளைச்சலைத் தந்தமைக்காக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாக இந்நாளை அந் நாட்டு மக்கள் அனுசரித்து வருகின்றனர்.
இதற்கமைய மெத்தாவூ என்னும் கிராமத்தில் புனித ரெமியூஸ் என்னும் ஆலயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி முதல் மரக்கறி மற்றும் பழ வகைகளை புலம் பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவரும், இக் கிராமத்தில் ஒரு சிறந்த விவசாயியாக திகழ்ந்தவரும், தற்பொழுது சுவீஸ் நாட்டில் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும் நீண்ட காலமாக புனித ரெமியூஸ் ஆலயத்தில் திருப்பண்டம் பொறுப்பாளருமாகவும், சுவீஸ் நாட்டின் வின்டீஸ் என்னும் கிராமத்தின் சமூக ஜனநாயக கட்சியில் போட்டியிட்டு கிராமோதய சபை உறுப்பினராகவும் திகழும் சந்தியாப்பிள்ளை கபிரியேல் என்பவர் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடை செய்த பொருட்களை ஆலய பீடத்தின் முன் வைத்து திருப்பலியின் ஊடாக இறைவனுக்கு நன்றி செலுத்தும் சடங்காகும் .

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY