
posted 27th September 2022
யாழ்ப்பாணம், சக்கோட்டைப் பகுதியில் 42 கிலோகிராம் கஞ்சா படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (23) அதிகாலை 5:30 மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த 551 படைப் பிரிவினர் 42 கிலோகிராம் கஞ்சாப் பொதி ஒன்றைக் கைப்பற்றினர்.
அதிகாலை சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சாப் பொதியை இறக்கிக் கொண்டிருந்தபோதே சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றினர்.
இதேவேளை படையினர் வருவதை அவதானித்த கடத்தல் காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் படகுடன் கடலுக்குள் தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY