குறுக்கு வேலி கவிதை நூல்

மருதமுனை ஜெஸீமா முஜீப் எழுதிய 'குறுக்கு வேலி' கவிதை நூல் வெளியீட்டு விழா பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸா தலைமையில் கலாசார மண்டபத்தில் நடந்தேறியது.

அக்கரைப்பற்று மாவட்டம் மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவர் - பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் நூல் மீதான உரையாற்றினர்.

வரவேற்புரையினை சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எம். நவாஸ் நிகழ்த்தியதுடன், அறிப்பாளரும் நாவிதன் வெளி பிரதேச செயலக கலாசார உத்தியாகத்தருமான ஏ.எல். எம்.சினாஸ் நெறிப்படுத்தினர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயலால் உட்பட பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

குறுக்கு வேலி கவிதை நூல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY