கவிஞர் ஜெயபாலனுடன் சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பிரபல கவிஞரும், தென்னிந்திய திரைப்பட நடிகருமான வி.ஜ.எஸ். ஜெயபாலனுக்கும், நிந்தவூர் கலை இலக்கியப் பேரவை முக்கியஸ்தர்களுக்குமிடையிலான இலக்கியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலை, இலக்கிய செயற்பாட்டாளரும், கவிஞருமான இலக்கியன் முர்ஷித்தின் ஏற்பாட்டில், நிந்தவூரில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம். ஜாபிர், செயலாளரும், கவிஞரும், பொறியியலாளருமான ரீ. இஸ்மாயில், சிரேஷ்ட உறுப்பினரும் கவிஞருமான சட்டத்தரணி உமரலி புதுநகரான் ஆகியோரின் முன்னிலையுடன் சந்திப்பு இடம்பெற்றது.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை தொடர்ந்து வரும் உயிரோட்டமான செயற்பாடுகளைக் கேட்டறிந்த கவிஞர் ஜெயபாலன், அதன் செயற்பாடுகளையும் கலை, இலக்கியப்பரப்பில் பேரவை ஆற்றிவரும் சேவைகளையும் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், சமகால கலை, இலக்கிய வடிவங்களின் சொல் நெறியும், அவை வேண்டி நிற்கும் அமைப்பியல்சார் செயற்பாடுகளும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் மற்றும் சகோதரத்துவ செயற்பாடுகளும், இளைய தலைமுறை மற்றும் பெண்கலை இலக்கிய செயற்பாட்டாளர்களின் கவனத்திலெடுத்து செயற்பட வேண்டிய விடயங்களெனப் பல்வேறு தளங்களில் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

கவிஞர் ஜெயபாலன், தனது ஆத்ம நண்பரான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமை நேரில் சந்திப்பதற்காக நிந்தவூருக்கு வருகை தந்தபோது மேற்படி இலக்கிய சந்திப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஜெயபாலனுடன் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY