
posted 6th September 2022
மன்னார் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் மஹோட்சவத் திருவிழாவில் மாதர் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை தீர்க்கும் முகமாக கற்பூரச் சட்டிகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு அம்பிகையுடன் வலம் வந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ந் திகிதி (31.08.2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதைத் தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் விழாவில் ஞாயிற்றுக்கிழமை (04.09.2022) ஐந்தாம் நாள் மாதர்கள் தங்கள் கைகளில் கற்பூரச் சட்டிகள் எந்தி அம்பிகையுடன் உள் வீதி மற்றும் வெளி வீதிகளில் வலம் வந்து தங்கள் நேர்த்திக் கடன்களை தீர்க்கும் திருச்சடங்கில் ஈடுபட்டனர்.
அதிகமான பெண்கள் இத் திருச் சடங்கில் பங்குபற்றியதையும் காணக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)