
posted 14th September 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானி காரியாலயத்திற்கு நேரில் சென்ற தலைவர் ரிஷாட் பதியுதீன், அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப குறிப்பு புத்தகத்தில் தமது இரங்கலைப் பதிவு செய்யதார்.
அத்துடன், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன் நேரில் கலந்துரையாடி தமது அனுதாபத்தை தலைவர் ரிஷாட் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் உலக மக்களுடன் தாமும், தமது கட்சியினரும் இணைந்து கொள்வதாக தலைவர் ரிஷாட் தமது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)