ஆங்கிலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பிறேம் சம்சன் லோகு சத்திய பிரமாணம்
ஆங்கிலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பிறேம் சம்சன் லோகு சத்திய பிரமாணம்

பிறேம் சம்சன் லோகு

மன்னார் மாவட்டத்தில் பேசாலை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு. பிறேம் சம்சன் லோகு திங்கள் கிழமை (26.09.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் ஆங்கிலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பேசாலையைச் சேர்ந்த திரு., திருமதி ஆரோக்கியம் லோகு எலிசபேத் குரூஸ் தம்பதினரின் ஏக புத்திரனுமாவார்.

அத்துடன் இவர் பேசாலை சென். பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் தற்பொழுது மன். தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்து வருகின்றார்.

இப் பகுதியில் ஊத்தியோக பூர்வமான மொழி பெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடாக இருக்கும் இவ்வேளையில் ஆங்கிலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இவர் உருவாகி இருப்பதை பலரும் இவரை பாராட்டுகின்றனர்.

ஆங்கிலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பிறேம் சம்சன் லோகு சத்திய பிரமாணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY