
posted 25th September 2022
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இக் கோவிலின் வருடாந்த பெருந் திருவிழா சனிக்கிழமை (24) காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள் கிரியைகளுடன் ஆரம்பித்து 8:45 மணியளவில் கொடியேற்றம் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
17 தினங்கள் நடைபெறும் இப் பெரும் திருவிழா எதிர்வரும் 10/10/2022 ம் திகதி திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது.
24/09/2022 முதல் 30/09/2022 வரை வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம் வருவார்.
01/10/2022 அன்றிலிருந்து வல்லிபுரத்து ஆழ்வார் குருக்கட்டு விநாயகர் ஆலய தரிசனத்துடன் அனைத்துத் திருவிழாக்களின் போது சுவாமி வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் .
முக்கிய திருவிழாக்களான;
- வெண்ணெய்த்திருவிழா 02/10/2022ம் திகதியும்
- துகில்த்திருவிழா 03/10/2022 திகதியும்
- பாம்புத்திருவிழா 04/10/2022 திகதியும்
- கம்சன் போர்த்திருவிழா 5/10/2022 ம் திகதியும்
- வேட்டை திருவிழா 6/10/2022 ம் திகதியும்
- சப்பறத்திருவிழா 7/10/2022 ம் திகதியும்
- தேர்த்திருவிழா 8/10/2022 திகதி சனிக்கிழமையும்
- சமுத்திர தீர்த் திருவிழா 9/10/2022 ம் திகதி ஞாயிற்றுக் கிழமையும்
- கேணி தீர்த்தம் 10/10/2022 திங்கட்கிழமையும்
- கொடி இறக்கம் அன்றைய நாள் பிற்பகல் 6:00 மணிக்கும் இடம்பெறவுள்ளன.
பெருந் திருவிழாக்களுக்கான வசதிகள் அனைத்தும் ஆலய நிருவாகம், பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை காவல் நிலையம் என்பனவற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவளை ஆலயத்திற்க்கு வருகை தருவோர் கலாசார உடை அணிந்து, தங்க ஆபரணங்களை அணிவதை தவிர்த்து, ஆசார சீலர்களாக வருகைதருமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY