வைத்தியதுறையின் அர்பணிப்பான சேவையால் கட்டுப்பாட்டுக்குள் கொரோனா - செயலாளர் பி.செந்தில்நந்தனன்
வைத்தியதுறையின் அர்பணிப்பான சேவையால் கட்டுப்பாட்டுக்குள் கொரோனா - செயலாளர் பி.செந்தில்நந்தனன்

செயலாளர் பி.செந்தில்நந்தனன்

மேற்கித்திய, சுதேச ஆயுள்வேத மற்றும் சித்தாத்த ஆகிய மூன்று சுகாதார சேவைகளார்களின் அர்ப்பணிப்பான சேவையாலேயே எம் நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்று நோயை நாம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் பி.செந்தில் நந்தனன் தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் உள்ளக விடுதியில் வியாழக்கிழமை (23.09.2021) மாலை கொரோனா நோயாளர்களுக்கான இடைத்தங்கள் சிகிச்சை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் பி.செந்தில் நந்தனன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

இந்த கொரோனா இடைத்தங்கள் முகாம் ஆரம்பிப்பதற்கு சுதேச வைத்தியதுறை அமைச்சினால் நான்கு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதும் இதை செவ்வையாக வழிநடத்தி இதை ஆரம்பிப்பதற்கு முழுமையான பங்களிப்பு செலுத்திய எமது சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதனுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டவர்கள். அத்துடன் இதற்கான ஒத்துழைப்பு வழங்கிய கட்டளை தளபதி விஐயசேகர மற்றும் அவரின் இராணுவ குழுக்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

வட மாகாணத்தின் சுகாதார சகல செயற்பாடுகளுக்கும் எமது சுதேச வைத்தியதுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி விஐயசேகர இவருடன் எமது மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன இவர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நிலையம் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல வட மாகாணத்தில் வவுனியா. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சுதேச வைத்தியத்துறையும், மேற்கித்திய வைத்தியதுறையும் இணைந்து தற்பொழுது நிலவிவரும் அதிதீவிர இந்த கொரோனா நோயை இப் பிரதேசங்கலிருந்து இல்லாதொழிக்கும் முகமாகவும் மக்கள் நலமாகவும் சுதேசமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வைத்திய சேவையாளர்களும் இணைந்து செயல்படுகின்றனர். அத்துடன் தாராபுரத்தில் பெண்களுக்கான இடைத்ததங்கள் முகாம் மிகவும் வெற்றிகரமாகவும், சிறப்பாக வும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

ஆகவே இந்த விடயத்தில் இங்கு கடமை புரிந்து வரும் அனைத்து சுகாதார திணைக்களத்தைச் சார்ந்த பணியாளர்கள் யாவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இன்றைய நிலையில் சுகாதார சேவைகளே மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கை செலுத்தி வருகின்றது. இப் பணியாளர்கள் யாவரும் மிகவும் தங்கள் அர்ப்ணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

அதாவது மேற்கித்திய சுகாதாரமாக இருக்கலாம் அல்லது சுதேச ஆயுள்வேத சுகாதாரமாக இருக்கலாம் அல்லது சித்தாத்த சுகாதார சேவைகளாக இருக்கலாம் இவர்களின் அர்ப்பணிப்பான சேவையாலேயே இந் நோயை நாம் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்திலே இதன் பாதிப்பு தற்பொழுது மிக குறைந்து வருகின்றது என்பதை மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையூடாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் இவ்விடயத்தில் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியமானது. இந் நோயானது இனம், மதம். சாதி என்ற பாகுபாடு பார்க்காது யாவரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாக காணப்படுகின்றது.

ஆகவே ஒவ்வொருவரும் சுகாதார சேவைகள் புரியும் ஒவ்வொருவரினதும் ஆலோசனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

வைத்தியதுறையின் அர்பணிப்பான சேவையால் கட்டுப்பாட்டுக்குள் கொரோனா - செயலாளர் பி.செந்தில்நந்தனன்

வாஸ் கூஞ்ஞ