வீதியில் நிற்கும் நாங்கள் காணாக்கப்பட்ட எம் பிள்ளைகளின் தாய்மாரே! சர்வதேசமே உன் கையில் - மனுவேல் உதயச்சந்திரா
வீதியில் நிற்கும் நாங்கள் காணாக்கப்பட்ட எம் பிள்ளைகளின் தாய்மாரே! சர்வதேசமே உன் கையில் - மனுவேல் உதயச்சந்திரா

மனுவேல் உதயச்சந்திரா

உலக நாடுகள் எங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், உறவினர்களுக்காக போராடும் தாய்மார் என எண்ணவேண்டும். அன்று பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தலும் பயந்த வாழ்க்கையும் இருந்தாலும், அவர்கள் ஊட்டிய நம்பிக்கை நமக்கு இறுதியில் ஏமாற்றத்தைத்தான் தந்தது. நாங்கள் நீதியைத்தான் கேட்கின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சார்பாக அதன் சங்கத் தலைவி மனுவேல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

தலைவி மனுவேல் உதயச்சந்திரா வெள்ளிக்கிழமை (17.09.2021) காலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜெனிவாவில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 48 வது அமர்வில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதித்துவங்கள் எமது இந்த ஏக்கமான, நியாயமான கேள்விகளுக்கு செவிசாய்க்கவேண்டும் தங்களை திரும்பி பார்க்க வேண்டும்.
அவர் தொடாந்து தெரிவிக்கையில்;

நாங்கள் ஜெனிவாவின் கவனத்துக்கு கொண்டு வருவதாவது;

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அம்மாக்கள் நாங்கள் வீதிகளில் 1500 நாட்களை கடந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் வீதிகளிலிருந்து போராடுவது நிதிக்காக அல்ல நீதிக்காகவே.

உயிரோடு கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிரோடு இருப்பார்களாகில் மீண்டும் எம்முடன் வந்து சேரவேண்டும்.

நாங்கள் இழந்த பிள்ளைகள் எல்லோரும் இளம் வயது கொண்ட பிள்ளைகளாகளே

நாங்கள் வீதிகளிலிருந்து போராடுவது ஜெனிவாவுக்கு மட்டுமல்ல உலக நாட்டுக்கே நன்கு தெரியும்.

எங்கள் போராட்டமானது நிதிக்காக அல்ல நீதிக்காகவே.

இந்த அரசை நம்பியே நாங்கள் எங்கள் பிள்ளைகளை அவர்களிடம் ஒப்படைத்தோம். யுத்தம் முடிவுற்ற கையோடு உங்கள் பிள்ளைகளை நாங்கள் உங்களிடம் பாதுகாப்பாக கையளித்துவிடுவோம் என்று சொன்னபடியால்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அரசிடம் ஒப்படைத்தோம்.

எனது மகனை 2008.09.12 ந் திகதி எங்கள் வீட்டுக்கு வந்து கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ஆனால் இதுவரைக்கும் எனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பது தெரியாது இருக்கின்றது?
நான் எனது பிள்ளையை தேடி செல்லாத முகாம்களே கிடையாது. அப்படியிருந்தும் இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எங்களது இறப்புக்கு முன் எங்களது பிள்ளைகள் சம்பந்தமான முடிவு எங்களுக்கு எட்டப்பட வேண்டும். எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என அரசு எமக்கு தெளிவூட்ட வேண்டும்? என்றே நாம் கேட்டு நிற்கின்றோம்.

நாங்கள் வீதியில் நிற்கும் அம்மாக்களாக எங்களை எண்ணாது பிள்ளைகளை தேடும் அம்மாக்களாக இருக்கின்றோம் என உலக நாடு எங்களை எண்ணிக்கொள்ள வேண்டும்.

ஆகவே சர்வதேசமே இந்த ஜெனிவா அமர்வில் எங்களுக்கு நல்லதொரு முடிவை பெற்றுத்தர வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் இப்பொழுது இலங்கை அரசையோ அல்லது இராணுவத்தையோ நம்பவில்லை. மாறாக சர்வதேசம் ஜெனிவாவிலிருந்து எங்களுக்க நல்லதொரு முடிவை தர வேண்டும் என்றே இப்பொழுது நம்பி இருக்கின்றோம்.

எங்கள் காலத்தில் இதற்கான முடிவு கிட்டாது விடத்து எங்களது காலத்தின் பின் இவைகள் சாட்சிகள் இன்றி அழிந்தவிடும் என அஞ்சுகின்றோம். இதைத்தான் அரசும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

நாங்ள் இறந்தாலும் ஒரு தாய் இருக்கும்வரை இதற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஆகவே சர்வதேசமே இந்த ஜெனிவா அமர்வில் எங்களது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

வீதியில் நிற்கும் நாங்கள் காணாக்கப்பட்ட எம் பிள்ளைகளின் தாய்மாரே! சர்வதேசமே உன் கையில் - மனுவேல் உதயச்சந்திரா

வாஸ் கூஞ்ஞ