
posted 12th September 2021
சாவகச்சேரி மந்துவில் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி வீழ்ந்து காயமடைந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
மந்துவில் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபப் பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அண்மையில் நடைபெற்ற உறவினர்களின் திருமண வீடு ஒன்றுக்காக சென்றிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி கீழே வீழ்ந்தபோது அவருடைய தலை கல் ஒன்றில் மோதியதால் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இருந்தபோதிலும் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்