
posted 24th September 2021
வடமராட்சிப் பிரதேசத்தில் இடைக்காலத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்தின் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது
வடமராட்சி கிழக்கில் குடத்தனை அம்பன் நாகர்கோவில் செம்பியன்பற்று மருதங்கேணி ஆகிய கிராமங்களில் உள்ள வயல்நிலங்களிலும் வடமராட்சி வடக்கு தெற்கு மேற்குப் பகுதிகளில் உள்ள மேட்டுநிலங்களிலும் கடந்த வருடங்களைப் போல இம்முறையும்விவசாயிகள் பெருமளவில் சின்னவெங்காயத்தைப் பயிரிட்டிருந்தனர்.
இவ்வருட ஆரம்பத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் சின்ன வங்காயம் அதிஉச்ச விலையாகஒருஅந்தர்30ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்டு வந்தது. வடமராட்சிப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை யாழ்குடாநாட்டில் உள்ள வலிகாமம் பிரதேச விவசாயிகளும் புத்தளம்மாவ ட்ட விவசாயிகளும் விதைக்காக நம்பிக் கொள்வனவு செய்வதுண்டு. கடந்த பருவகாலத்தைப் போல இம்முறையும் சின்ன வங்காயம் அதிக விளைச்சல் விளைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

எஸ் தில்லைநாதன்