
posted 10th September 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்