
posted 11th September 2021
யாழ்.மாவட்டத்தில் 71 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கிளிநொச்சியில் 03 பேர், பருத்தித்துறையில் இருவர் என உயிரிழந்த ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தில் 71 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 34 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 03 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், ஊர்காவற்றுரை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்