யாழ் இந்திய துணை தூதுவர் வட மாகாண ஆளுநரை சந்தித்தார்

இந்தியத் துணைத்தூதுவர் ரா. நட்ராஜ் ஜெயபாஸ்கரன்அவர்கள், மாியாதையின் நிமித்தம் வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை செவ்வாய் கிழமை (செப்டம்பர் 28, 2021) இன்று சந்திப்பை மேற்கொண்டார்.

இவர்களின் சந்திப்பின்போது இந்திய துணைத் தூதுவர் இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துளைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துளையாடினார் என இந்திய யாழ் துணை தூதரக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

யாழ் இந்திய துணை தூதுவர் வட மாகாண ஆளுநரை சந்தித்தார்

வாஸ் கூஞ்ஞ