
posted 2nd September 2021

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இன்று புதன் கிழமை மூன்றாவது தினமாகவும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கடந்த திங்கட் கிழமை முதல் இரண்டாம் கட்ட இரண்டாவது டோஸ் வழங்கல் ஆரம்பமாகியது.
கொவிட் - 19 வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கென இப்பிராந்தியத்தில் சைனோபாம் தடுப்பூசி ஏற்ப்படுகின்றது.
ஏற்கனவே கல்முனைப் பிராந்தியத்தில் 94.47 வீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன.
இதேவேளை நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் இன்று வரை வெற்றிகரமாக இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்வரையான இரு தினங்களும் 6000 டோஸ்கள் தடுப்புமருந்து இப்பிரதேச மக்களுக்கு செலுத்தப்பட்டதாகவும், இன்று மேலும் 2000 டோஸ்கள் செலுத்தப்பட்டதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தெரிவித்தார்.
மீண்டும் இத்தடுப்பூசிகள் கிடைக்கும் போது மேலும் செலுத்தப்பட வேண்டிய மக்களுக்கு செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
தவிரவும் தேசிய ரீதியாக எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் இலங்கையில் கொவிட் - 19 மரணங்கள் குறைவடையும் சாத்தியமுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்