முதியவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (செப்-24) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சின்னத்துரை-மகாலிங்கம் (வயது-73) என்ற முதியவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் இன்றைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த முதியவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதியவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்

எஸ் தில்லைநாதன்