
posted 2nd September 2021

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய தரப்படுத்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.
முதலிடத்தினை பிடித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்