முடக்கநிலையில் நன்கொடை செய்த தனவந்தர் பொலிசாரால் கைது

முடக்க நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமகன் ஒருவரினால் வதிரி இரும்பு மதவடிப் பகுதியில் வைத்து வழங்கப்பட்ட 2000 ரூபா நிதியினை பொலிசார் தடுத்து நிறுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முடக்க நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனவந்தர் ஒருவரினால் திங்கட்கிழமை (06) முற்பகல் 2000 ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதனை அறிந்த வடமராட்சி மக்கள் பலர் அங்கு கூடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன் போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் கூடி இருந்த மக்களை கலைத்ததுடன் பண உதவி செய்த மூவரை கைது செய்து கொண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால் ஊரடங்கு நேரத்தில் பொது மக்களைக் கூட்டி பண உதவி வழங்கிய தாலேயே மூவர் பொலிஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

முடக்கநிலையில் நன்கொடை செய்த தனவந்தர் பொலிசாரால் கைது

எஸ் தில்லைநாதன்