
posted 16th September 2021
மன்னார் முசலி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் குறிப்பிட்ட அளவு தடுப்பூசி மாத்திரமே கையிருப்பில் இருப்பதால் பைசர் (Pfizer) இரண்டாவது தடுப்பூசி போடாதவர்கள் முதன்மையாக வந்து இத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் 17.09.2021 இறுதி நாளாக இருப்பதால் இத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்படி முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
முசலி பிரதேசத்தில் பைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசி முதலாவது பெற்றுக் கொண்டவர்கள் இதுவரைக்கும் இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இறுதி சந்தர்ப்பமாக 17.09.2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இவ் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
ஆகவே தங்களையும் தங்கள் சமூகத்தையும் பாதுகாக்ககும் நோக்குடன் இத் தடுப்பூயை பெற்றுக்கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும்.
ஆகவே குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகள் மாத்திரம் கையிருப்பில் இருப்பதால் முன்னுக்கு வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன்
மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டத்தவர்களுக்கு இத் தடுப்பூசி இங்கு வழங்கப்படமாட்டாது என முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுவிடயமாக தொடர்பு கொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி 0233238281 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ