
posted 2nd September 2021

அச்சுவேலி நாவல்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை(02) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் பருத்தித்துறை இ.போ.ச சாலையில் சாரதியாக பணியாற்றிவரும் நாவற்காடு பகுதியை சேர்ந்தவரும் அல்வாய் பகுதியில் திருமணம் செய்து வசித்து வசிப்பவருமான தியாகராசா மதனபாலன் (வயது- 43) என்பவரே
உயிரிழந்துள்ளார்.
நேற்று(02) பிற்பகல் வயல் உழுது கொண்டிருந்த போது மழை பெய்ததாகவும் அப்போது உழவு இயந்திரப் பெட்டிக்கு கீழ் பகுதியில் ஒதுங்கி இருந்த போது மின்னல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் அவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்