
posted 9th September 2021
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் திங்கட்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு;
யாழ்.மாவட்டத்தில் 75 பேர்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேர்
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர்
சாவகச்சேரி ஆதா வைத்தியசாலையில் 06 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 பேர்
வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.
வவுனியா மாவட்டத்தில் 05 பேர்
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்
ஆகியோருடன் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேர்
கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென்மராட்சியின் கொடிகாமம் சமுர்த்தி வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் மூவர் உட்பட ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடிகாமம் சமுர்த்தி வங்கிக்கு சென்றிருந்தவர்கள் 44 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில்;
சமுத்தி உத்தியோகத்தர்கள் 03 பேர்,
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பட்டதாரிப் பயிலுனர் ஒருவர்,
சாவகச்சேரி நகரசபை ஊழியரான காவலாளி ஒருவர்
ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (செப். 6) 11 பேர் கோவிட்- 19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (07) கொரோனாத் தொற்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விtரங்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில்,
யாழ்ப்பாணத்தில் 02 பேர், நல்லூரில் 02 பேர், சண்டிலிப்பாயில் ஒருவர், உடுவிலில் ஒருவர், தெல்லிப்பழையில் ஒருவர், கோப்பாயில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னதாக இன்று காலை தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கும் அன்ரிஜென் பரிசோதனை ஊடாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதனால் இன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும்.

எஸ் தில்லைநாதன்